பிரித்தானியர்களை போல அல்ல சீனர்கள்: வுஹான் நகரில் சிக்கிய லண்டன்வாசியின் நேரடி அனுபவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சீனாவில் கொரோனா பரவல் மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவர அங்குள்ள மக்களே முக்கிய காரணம் என லண்டன்வாசி ஒருவர் தமது நேரடி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரியில் சீனாவில் உள்ள தமது உறவினர்களை சந்திக்க சென்ற 31 வயதான ஜி லு, சுமார் 141 நாட்கள் வுஹான் நகரில் அமுலுக்கு வந்த ஊரடங்கில் சிக்கினார்.

வுஹான் நகரம் மொத்தமாக மூடப்பட்டது. குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்வதை அதிகாரிகள் தரப்பு கண்காணித்து வந்தது.

மட்டுமின்றி, சுமார் 76 நாட்கள் கடுமையான ஊரடங்கு விதிகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால் சீன மக்கள் அரசின் விதிகளை தீவிரமாக பின்பற்றியதுடன், அரசுக்கு ஒத்துழைப்பும் அளித்துள்ளனர்.

விதிகளை மீறும் மக்களுக்கு, அதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறியுள்ளனர்.

மேலும், சீனாவில் இளையோர்களே அதிகமாக அரசின் விதிகளை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

மட்டுமின்றி, விதி மீறலில் ஈடுபடும் பொதுமக்கள் தொடர்பில், புகார் அளிப்பதை சமூக ஒழுக்கமாகவே கருதியுள்ளனர்.

ஆனால் லண்டனில் கடுமையான விதிகள் அமுலில் இருந்தும், மக்கள் கவலைப்படுவதில்லை எனவும், விதி மீறலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் எனவும் ஜி லு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்