ஒருவேளை தனக்கு கொரோனா இருக்குமோ என்று பயப்படுபவர்கள், பரிசோதனை செய்து 12 நிமிடங்களிலேயே முடிவைத் தெரிந்துகொள்ளும் வகையில், அதிவேக பரிசோதனை ஒன்று பிரித்தானியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அந்த அதிவேக பரிசோதனை, 97 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைக் கொடுப்பதாக சோதனை முயற்சிகளில் தெரியவந்துள்ளது.
இன்னும் பதினைந்தே நாட்களில் அந்த சோதனை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மருந்தை தயாரித்துள்ள Boots என்னும் பிரித்தானிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான Sebastian James கூறும்போது, இது சந்தைவெளிகளில் பெரும் எண்ணிக்கையில் சோதனைகள் செய்து பிரித்தானியர்கள் மீண்டும் தங்கள் சாதாரண வாழ்வை தொடர உதவியாக இருக்கும் என்றார்.
இப்போதைக்கு பரிசோதனைக்கான கட்டணம் 120 பவுண்டுகள் என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரிக்கும்பட்சத்தில் கட்டணம் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை, குறிப்பாக, அறிகுறிகள் இல்லையென்றாலும், ஒருவேளை தனக்கு கொரோனா இருக்குமோ என பயப்படுபவர்களுக்காக அறிமுகம் செய்யப்படுகிறது.