வாரம் தோறும் 10 சதவிகித மக்களுக்கு கொரோனா பரிசோதனை! இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்

Report Print Karthi in பிரித்தானியா
91Shares

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது இங்கிலாந்து மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் வீதம் ஒவ்வொரு வாரமும் பரிசோதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைக்குரிய “ஆபரேஷன் மூன்ஷாட்” வெகுஜன திரையிடல் திட்டத்தின் மூலமாக 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்கும் உமிழ்நீர் கருவிகளை பயன்படுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், வாரத்தில் சுமார் 3,00,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது ஒரு நாள் எண்ணிக்கையில் அதிகபட்சம் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் சுகாதாரத்துறை உள்ளது.

கடந்த வாரம் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் பாராளுமன்றத்தில் இன்னோவா நிறுவனம் தயாரித்த “பல மில்லியன்” உமிழ்நீர் பரிசோதனை கருவிகளை அரசாங்கம் வாங்கியதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 ஆம் திகதி ஜான்சன் இந்த சோதனைகள் "உள்ளூர் மயமாக்கப்பட்ட வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்" என்று கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்திய தொற்று பரவல் அதிகரிப்புகள் இந்த பரிசோதனைக் கருவிகளின் பயன்பாட்டினை கேள்வியெழுப்பியுள்ளன.

ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்