2021 எப்படி இருக்கும்?பிரித்தானியர்களின் கருத்து

Report Print Balamanuvelan in பிரித்தானியா
340Shares

கொரோனாவால் 2020 ஏற்படுத்திய காயங்கள் இன்னமும் ஆறாத நிலையில், 2021ஆம் ஆண்டு பிறக்க இன்னமும் மிகச் சில நாட்களே உள்ளன.

இந்நிலையில், 2021 எப்படி இருக்கும் என்பதைக் குறித்து பிரித்தானியர்களின் கருத்து என்ன என்பதை அறிவதற்காக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் முக்கால்வாசிப்பேர் 2021ஆம் ஆண்டு, 2020ஐவிட சிறந்ததாகத்தான் இருக்கும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

ஒருபக்கம் இப்படி நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், இன்னொருபக்கம், 43 சதவிகிதம் பிரித்தானியர்கள் கொரோனாவின் தாக்கத்தின் விளைவான பொருளாதார பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.

பத்தில் ஏழு பிரித்தானியர்கள், 2020 தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் மோசமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ள நிலையில், 96 சதவிகிதத்தினர் இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு மோசமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சிலருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஏழு ஆண்டுகளைவிட 2021 நன்றாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

Ipsos Mori என்ற அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வில், வயது வந்த 1,000 பேர் பங்குகொண்டார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்