பிரித்தானியாவின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலிருந்து பிரபல நாடு நீக்கம்! புதிய கட்டுப்பாடு அறிமுகம்

Report Print Basu in பிரித்தானியா
529Shares

பிரித்தானியாவின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலிருந்து ஐக்கிய அரவு அமீரகம் நீக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பிரித்தானியா வரும் எவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் Grant Shapps தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு அபுதாபி, துபாய், அஜ்மான், புஜைரா, உம் அல்-குவைன், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி மற்றும் துபாய் போன்ற பிரபலமான விடுமுறை இடங்கள் உள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பிரபலங்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் சமீபத்திய வாரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்ததாக விமர்சிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே தவிர வெளிநாடுகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் Grant Shapps மக்களுக்கு நினைவுபடுத்தினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்