வெளிநாடு ஒன்றில் பிரித்தானிய லொறி சாரதியின் உணவை பிடுங்கிக்கொண்ட பொலிசார்: கொந்தளிக்க வைக்கும் ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1066Shares

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் வெளியேறியது, அதற்காக வாக்களித்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாது.

பிரெக்சிட்டுக்காக போராடிய பிரதமர் முதலான அரசியல்வாதிகளுக்கு பிரெக்சிட் என்ன பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதோ தெரியாது.

ஆனால், அன்றாடம் வேலை செய்யும் சாரதிகள் முதலானோர் கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கப்படுகிறார்கள் (சொல்லப்போனால் இரண்டு பக்கத்திலும்). இந்நிலையில், பிரெக்சிட்டால் கடுப்படைந்துள்ள நாடுகள் இதுபோன்ற அடிமட்ட தொழிலாளர்களை கஷ்டப்படுத்தி வருகின்றன.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றை இதற்கு உதாரணமாக காட்டலாம். அந்த வீடியோவில், பிரித்தானிய லொறி சாரதி ஒருவரை பிரெக்சிட்டை கூறி கேலி செய்யும் நெதர்லாந்து பொலிசார், அவரது மதிய உணவில் கைவைப்பதை ஒன்றும் செய்ய இயலாமல் அவர் கவலையுடன் பார்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

மேல் தட்டு மக்கள், புதிதாக விமானங்களில் கொண்டு வரப்பட்ட லெட்டூஸைக் கொண்டு, அவர்களது உணவில் எந்த மாற்றமும் இன்றி தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக உணவருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்த உணவுப்பொருட்களை மக்களுக்கு கொண்டு வரும் லொறி சாரதிகள் வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள் என்னும் விடயம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

அந்த வீடியோவில், நெதர்லாந்துக்குள் நுழையும் லொறி சாரதி ஒருவரின் சாண்ட்விச்சை சோதிக்கும் நெதர்லாந்து எல்லை அதிகாரி ஒருவர், அதில் இறைச்சி இருப்பதால், அதை பறிமுதல் செய்கிறார்.

சரி, அந்த இறைச்சியை எடுத்துக்கொண்டு, பிரட்டை மட்டுமாவது தரமுடியுமா என பரிதாபமாக கேட்கிறார் அந்த சாரதி.

இல்லை, எல்லவற்றையும் பறிமுதல் செய்துவிடுவோம் என்று கூறும் அந்த அதிகாரி, நக்கலாக, ’பிரெக்சிட்டுக்கு உங்களை வரவேற்கிறோம் சார்’, என்று கூறி அந்த சாரதியை நையாண்டி செய்கிறார், மற்ற அதிகாரிகள் கேலியக சிரிக்கிறார்கள். பிரெக்சிட்டுக்குப் பிந்தைய விதிமுறைகளின்படி, பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம்.

ஆகவே, தாங்கள் சட்டப்படி தங்கள் கடமையை செய்வதாகக் கூறி சாரதிகளின் உணவில் கைவைக்கிறார்கள் இந்த அதிகாரிகள். இந்த விடயம் பிரித்தானியர்களை கடும் கொந்தளிப்படையச் செய்துள்ளது.

இந்த பிரெக்சிட்டால் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் புதிது புதிதாக தோன்றப்போகிறதோ தெரியவில்லை! இயக்குநர் விசு அவர்களது திரைப்படம் ஒன்றில், வீட்டுக்கு நடுவில் இரண்டாக கோடு போட்டு அவரது மகன் வீட்டைப் பிரித்துவிடுவார்.

பிரச்சினை வரும்போதெல்லாம், இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால், வீட்டுக்கு நடுவில் கோடு போட்டிருக்கமாட்டாய் அல்லவா என்பார் அப்பா... அந்த கதைதான் நினைவுக்கு வருகிறது பிரெக்சிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை நினைக்கும்போது!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்