பத்தில் ஒரு பகுதியை மட்டுமே லண்டன் மக்கள் பெற்றுள்ளனர்! தடுப்பூசி குறித்த உண்மையை உடைத்த மேயர்

Report Print Santhan in பிரித்தானியா
507Shares

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி விவகாரத்தில் பத்தில் ஒரு பகுதியை மட்டுமே லண்டன் மக்கள் பெற்றுள்ளதாக மேயர் சாதிக்கான வேதனையுடன் கூறியுள்ளார்.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகரான லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக லண்டனில் கடும் கட்டுப்பாடுகளும், அங்கிருக்கும் வெளியேறுவதற்கு மக்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லண்டன் மேயர் சாதிக்கான், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிரித்தானியா முழுவதும் வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பத்தில் ஒரு பகுதியை மட்டுமே லண்டன் மக்கள் பெற்றுள்ளனர்.

இது மிகவும் கவலையாக இருப்பதாகவும், லண்டன் நகரத்தின் அளவு, அதன் தேவை போன்றவைகளை அவசியம் குறித்து அரசாங்கத்துடன் பேசுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது டுவிட்டர் பக்கத்தில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், லண்டன் மக்களுக்கும், பரமாரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசியை அவசரமாக பெறுவது குறித்து நான் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்