இறப்பு விகிதம்... உலக நாடுகளை முந்திய பிரித்தானியா: வெளிவரும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
534Shares

கொரோனா இறப்பு விகிதத்தில், பிரித்தானியா உலக நாடுகளை முந்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 11 முதல் அதிக கொரோனா இறப்பு விகிதத்தை பிரித்தானியா கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் பிரித்தானியாவில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 935 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஆனால் ஜனவரி 17 வரையான தரவுகளின் அடிப்படையில், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிரித்தானியாவை விட குறைவான சராசரி இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன.

பிரித்தானியாவில் ஒவ்வொரு பத்து லட்சம் பேர்களில் ஒவ்வொரு நாளும் 16 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறக்கின்றனர்.

இந்த வரிசையில் செக் குடியரசு இரண்டாவது இடத்திலும், போர்த்துகல், ஸ்லோவாக்கியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

பிரித்தானியாவில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் தற்போது கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு 20 பேர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,535 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

மேலும் 599 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்த மரண எண்ணிக்கை 89,860 என பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் மொத்தம் 4 மில்லியன் மக்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 80 வயதைக் கடந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்