மோடி ஒரு சிறந்த மனிதர்: டிரம்ப் ஏன் புகழ்கிறார்?

Report Print Maru Maru in அமெரிக்கா

’மோடி ஒரு சிறந்த மனிதர்’ என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் புகழ்ந்து கூறுகிறார்.

இதுவரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் அமெரிக்க இந்தியர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில் கலந்துகொண்டு பேசியதில்லை.

முதன்முறையாக டிரம்ப் பேசினார். அப்போது அவர் மோடியின் ஆற்றல் மிக்க செயல்பாடு குறித்தும் அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் தனது நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக உழைக்கிறார் தீவிரவாதத்துக்கு எதிராகவும் செயல்படுகிறார் என்றும் பாராட்டினார்.

அதுபோன்ற தொழில் முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை வேகம் அமெரிக்காவுக்கும் தேவைப்படுகிறது.

அதுமட்டும்ல்ல, தான் பதவிக்கு வரும் சூழல் ஏற்படுமானால் நிச்சயமாக இந்தியாவோடு எதிர்காலத்தில் நல்ல நட்புறவு நீடிக்கும். அதனால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் வாக்களிக்கவும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து மற்ற நாடுகளோடும் ஆக்கப்பூர்வமான தொழில் முன்னேற்றங்களை ஏற்படுத்த திருப்பமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தியாவோடு அதிக அளவிலான தொழில் மற்றும் வணிகத்தொடர்புகள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்

மேலும் நான் இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் ரசிகன், நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை மாளிகையுடன் இந்தியர்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.

இந்தியர்கள் மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. இந்தியர்கள் அமைதியை விரும்புகிறவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான அவர்கள் செயல்பாடு நேர்மையானது.

நான் கடந்த 19 மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் நிகழ்ச்சிகளை கவனித்து வருகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பங்கு பாராட்டத்தக்கது.

மும்பையில் நடந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என நினைவுபடுத்தினார்.

இந்தியாவும் இஸ்லாம் பயங்கரவாதத்தை, அமெரிக்காவை போலவே எதிர்கொண்டு வருகிறது. இதனால், இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருப்போம் இந்த வார்த்தையை பயன்படுத்தி தேர்தலில் கிளாரி கிளிண்டனோடு மோதுவேன் என்றார்.

மோடியின் நாடு மற்றும் மதம் சார்ந்த பற்றுதல் இந்தியர்களுக்கு பிடித்திருக்கிறது. அவர் இந்தியாவின் ஒரு சிறந்த மனிதராக திகழ்கிறார் என, அமெரிக்க இந்தியர்கள் ஏற்படு செய்திருந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.

எல்லோரையும் தடாலடியாக விமர்சிக்கும் டிரம்ப் இந்தியாவையும் மோடியையும் நேசித்தும் பாராட்டியும் பேசியது ஆச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments