விடைபெற்ற ஒபாமாவுக்கு 8 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்: அவர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுமி ஒருவர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில், தாங்களே சிறந்த ஜனாதிபதி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் ஜனாதிபதியானது உலகில் உள்ள பல பெண்களுக்கு விரும்பதகா வகையில் இருந்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் ஜனாதிபதி ஆன பின்பும் அவருக்கு எதிராக உலகில் உள்ள பல பெண்கள் அமைப்பு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி சகானா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நீங்கள் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இருந்துள்ளீர்கள். கடந்த 8 வருடங்களில் நீங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். இதனால் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

ஆனால் அவை எல்லாம் டிரம்ப் மூலம் சிதறிவிட்டன. உலக வரலாற்றில் மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் நீங்களும் ஒருவர் அதைத் தான் கண்டிப்பாக கூறுகிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த ஒபாமா,

தனது கடிதத்தில், நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி சகானா. உங்கள் வார்த்தைகள் எனக்கு பலவற்றை உணர்த்தியுள்ளது. தற்போது தான் ஜனாதிபதியாக இல்லாததால், பொதுவாழ்க்கையில் ஈடுபடமாட்டேன் என்று எண்ண வேண்டாம்.

தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு தேவையானவற்றிற்கு தொடர்ந்து போராடுவேன் இது உறுதி. உங்களைப் போன்ற தலைமுறையினர் தான் அமெரிக்காவின் நாளைய எதிர்காலம் என்று உணர்ச்சிபூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.

இதை சிறுமி சகானாவின் உறவினர் Mihir Bijur என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments