வார இறுதியை கொண்டாட மெலனியா டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலனியா டிரம்ப், வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்காக 64,600 டொலர் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவியும் நாட்டின் முதல் குடிமகளுமான மெலனியா டிரம்ப் கடந்த வெள்ளியன்று மக்கள் வரிப்பணம் 64,600 டொலர் செலவில் வார இறுதி நாளை கொண்டாடியுள்ளார்.

மட்டுமின்றி 16,168 டொலர் செலவில் வாடகை விமானத்தில் தலைநகர் வாஷிங்டனில் இருந்து புளோரிடா சென்றுளார்.

அங்குள்ள Mar-a-Lago சுகாதார கிளப்பில் ஓய்வெடுத்துள்ளார். இருப்பினும் அங்கு அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை எதற்கும் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

Mar-a-Lago அழகு சுகாதார கிளப்பானது டிரம்புக்கு சொந்தமானதாகும். மட்டுமின்றி சமீப நாட்களாக ஆபாச பட நடிகைகளுடன் தொடர்ந்து டிரம்பின் பெயர் அடிபடுவதால் அவர் பொதுவெளியில் வருவதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் டிரம்ப் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்தின் டாவோஸ் சென்ற நிலையில் மெலனியா தனி விமானத்தில் புளோரிடா பறந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers