அமெரிக்கா ஜனாதியாக 500 நாட்களை கடந்த டிரம்ப்: விரும்பாத 5 முக்கிய சம்பவங்கள் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவியெற்றார். ஜனாதிபதியான பின்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய வேலையய் செய்து வருகிறார்.

குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, வட கொரியா விவகாரம், சிரியாவில் போர், ரஷ்யாவின் தேர்தல் குறுக்கீடு எனப் பல எதிர்மறை கருத்துகளும், பாலியல் புகார்களும் என அவரை பின் தொடர்ந்து வந்தபடி தான் உள்ளன.

இந்நிலையில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியெற்று 500 நாட்கள் கடந்துவிட்டது. அப்போது அவர் நேரடியாக சந்தித்த 5 சம்பவங்கள்.

  • கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் திகதி ரஷ்ய தூதருடனான பேச்சுவார்த்தை குறித்து துணை ஜனாதிபதியிடம் மறைத்ததற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ப்ளைன் பதவி விலகினார். அதோடு எப்.பி.ஐ-யிடம் மன்னிப்பும் கோரினார்.
  • டிரம்ப் பிரச்சாரம் மற்றும் ரஷ்யக் குறுக்கீடு குறித்து ஜனாதிபதிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததற்காக கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் திகதி எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமேவை பதவியை விட்டு தூக்கினார்.
  • ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததை விசாரிக்க கடந்த மே 17-ஆம் திகதி சிறப்பு அதிகாரியாக ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். இவர், டிரம்ப் பிரசாரத்தில் நடந்த பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தார்.
  • ஜனாதிபதி தேர்தலின்போது ரஷ்ய அதிகாரிகளுடன் ரகசியச் சந்திப்புகள் நடைபெற்றதை மறைத்துவிட்டேன் என்று கடந்த அக்டோபர் 5-ஆம் திகதி எப்.பி.ஐ விசாரணையில் தேர்தல் பிரச்சார அதிகாரி ஜார்ஜ் பபடோபோலோஸ் தெரிவித்தார். பொய்யான தகவல்களைத்தான் பிரசாரத்தில் தெரிவித்ததாகவும் கூறினார்.
  • கடந்த அக்டோபர் 27-ஆம் திகதி ஆரம்பத்தில் இருவரும் பணமோசடி செய்ததை மறுத்தாலும், எப்.பி.ஐ. விசாரணையில் பண மோசடி செய்ததை தேர்தல் பிரச்சார அதிகாரிகள் பால் மானபோர்ட் மற்றும் ரிக் கேட்ஸ் ஒப்புக்கொண்டனர். இவர்கள் தேர்தல் பிரசார அதிகாரிகளாகப் பணியாற்றியபோதுதான் இந்தப் பண மோசடி நடந்துள்ளது.
  • கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் திகதி ஜனாதிபதி டிரம்புடனான தவறான உறவில் இருந்ததற்காகச் சட்டரீதியாக பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ரமி டேனியல்ஸ் வழக்கு தொடர்ந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் தரப்பு மறுப்பு தெரிவித்தாலும் வழக்கு தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers