அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தினமும் பூஜை செய்து வரும் இளைஞர்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இளைஞர் ஒருவர் தினமும் பூஜை செய்து வரும் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் கோன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா(31).

விவசாயியான் இவர் தினந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புகைப்படத்திற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

அவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, பொட்டு வைத்து ஆரத்தி எடுப்பது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்திய வம்சாவளி இளைஞர் அமெரிக்காவில் அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அறிந்ததிலிருந்து கிருஷ்ணா டிரம்ப் பூஜையை செய்து வருகிறார்.

இதைப் பார்த்தாலாவது இந்தியர்கள் என்றால் எப்படிப்பட்டவர்கள் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காக இப்படி செய்து வருவதாக புஸ்சா கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers