வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை: எச்சரிக்கும் குழந்தையின் அம்மா

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Coloradoவில் 3 வயது குழந்தை ஒன்று வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lindsey மற்றும் Alan McIverஇன் குழந்தைகள் தினமும் தங்கள் பெற்றோருக்குமுன் எழுந்து விடுவது வழக்கம்.

அவர்கள் சிறிது நேரம் விளையாடுவார்கள், சிறிது நேரம் கலர் அடிப்பார்கள், அப்புறம்தான் தங்கள் பெற்றோரை எழுப்புவார்கள்.

ஆனால் அன்று அவர்களை அவர்களது 4 வயது மகன் Jace வந்து எழுப்பினான். அவன் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான், பதட்டத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

பெற்றொருக்கு மூன்றே வார்த்தைகள்தான் புரிந்தன, Kloe, உள்ளே, வாஷிங் மெஷின் அவ்வளவுதான்...

புதிதாக வாங்கிய வாஷிங் மெஷினுக்குள் Kloe ஏறி உட்கார, Jace கதவை மூடி மெஷினை ஆன் செய்து விட்டான்.

பதறி ஓடிச் சென்ற Lindseyம் Alan McIverம் பார்க்கும்போது குழந்தை வாஷிங் மெஷினுக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

பதறிப்போய் வாஷிங் மெஷினின் கதவைத் திறக்க முயன்றால், கதவு திறக்கவில்லை.

ஒவ்வொரு பட்டனாக அழுத்த, ஒரு வழியாக கதவு திறந்தது, குழந்தையை வெளியே எடுத்தபோது நல்ல வேளையாக மெஷின் சுற்றியதில் அவளுக்கு இடிபட்டதோடு உடை நனைந்திருந்ததேயொழிய வேறொரு சேதமும் ஏற்படவில்லை.

நடந்ததை பேஸ்புக்கில் பதிவிட்ட Lindsey, குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு மற்ற பெற்றோர்களை எச்சரித்துள்ளார்.

பொதுவாக வாஷிங் மெஷின்களில் குழந்தைகள் அவற்றை பயன்படுத்தாமல் தடுப்பதற்காக சைல்ட் லாக் ஒன்று இருக்கும் என்றாலும், சில மெஷின்களில் கதவைத் திறக்க இயலும்.

பிள்ளைகள் உள்ளே போய் உட்கார்ந்து கதவை மூடிக்கொண்டாலும் ஆபத்துதான். இரண்டு ஆண்டுகளுக்குமுன் Arkansas பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒருத்தி இதேபோல் வாஷிங் மெஷினுக்குள் ஏறி உட்கார்ந்து கதவை மூடிவிட்டள்.

அந்த குறிப்பிட்ட மொடலில் கதவை மூடி மெஷினை ஆன் செய்துவிட்டால் இடையில் கதவைத் திறக்க இயலாது.

அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்துபோனாள். எனவே வாஷிங் மெஷின்கள் விடயத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் Lindsey.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers