தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் வைரலான ஒரு வீடியோ: வேடிக்கை சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லும் ஒரு நபரை அந்தப் பெண் நிராகரிப்பதுபோல் தோன்றும் ஒரு வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலானது.

அந்தப் பெண் ஏன் அந்த நபரை நிராகரித்தார், அவர் யார், அந்த பெண்ணிடம் அவர் என்ன கூறினார் என்னும் கேள்விகள் எழும்ப, அவரை சந்திக்க வேண்டும் என சிலர் விருப்பம் தெரிவிக்க, அந்த வீடியோ வேகமாக வைரலானது.

Gina என்னும் ஒரு பெண் அந்த வீடியோவை பகிர்ந்து, ட்விட்டர், தயவு செய்து அந்த பெண்ணைக் கண்டுபிடி, அந்த ஆண் அவளிடம் என்ன கூறினார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.

பலரும் அந்த வீடியோவின் கீழ் வேடிக்கையாக பல கமெண்ட்களை பதிவிட, அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.

Ellie Delgado என்னும் ஒரு பெண் அந்த வீடியோவில் இருக்கும் பெண் தான்தான் என்றும், தன்னுடன் இருப்பது தன்னுடைய தந்தை என்றும், தன்னிடம் அவர் விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றி கூறியதற்குத்தான் அவ்விதம் ரியாக்ட் செய்ததாகவும் கூற, ஆர்வமாக கமெண்ட் கொடுத்த ட்விட்டர் பயனர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது.

உடனடியாக அந்த வீடியோவைப் பகிர்ந்த Gina என்ற பெண் Ellieயிடம், ஆர்வக்கோளாறால் தான் அவ்விதம் செய்துவிட்டதாகக் கூறி அந்த வீடியோவை டெலீட் செய்து விடுவதாகவும் உறுதியளித்துக் கொண்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers