இளைஞர்களுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பிய பெண்! விசாரணையில் பெண்ணின் வயதைக் கேட்டு அதிர்ச்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் இணையத்தில் இளைஞர்களை குறிவைத்து நிர்வாண வீடியோக்களை அனுப்பிய விவகாரத்தில், அந்த பெண்ணின் வயது 43 என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தின் Philadelphia பகுதியைச் சேர்ந்தவர் Linda Paolini.

இவரை FBI அதிகாரிகள் கடந்த செவ்வாய் கிழமை திடீரென்று கைது செய்தனர்.

இதைப் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 43 வயதான Linda Paolini இணையத்தில் தான் ஒரு இளம் பெண் என்று கூறி, இணையத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயதிற்கும் குறைவான மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இளம் பெண்ணின் நிர்வாண வீடியோக்களை அனுப்பி அவர்களை மயக்கி, அவர்களின் உணர்ச்சி வீடியோக்களை பெற்று வந்துள்ளார்.

இந்த தகவல் FBI அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் FBI அதிகாரிகள் தற்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும் முழு விசாரணைக்கு பின் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

சமீபகாலமாக இணையதளங்களில் 13 வயதிற்கும் குறைவான சிறார்களின் நிர்வாண வீடியோக்கள் விற்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. அதற்காகவே இவர் தன்னுடைய வயதைப் பற்றி தெரிவிக்காமல், குறித்த சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் வீடியோக்களை பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers