திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புது மாப்பிள்ளை செய்த அதிர்ச்சி செயல்! இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் மணமகன் ஹோட்டல் பெண் பணியாளரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் New Jersey மாகாணத்தின் Northampton Valley Country Club-ல் கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் 24-ஆம் திகதி புதிதாய் திருமணமான Matthew Aimers-Kayla தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துளது.

அப்போது Matthew Aimers அங்கிருந்த பெண் பணியாளர் ஒருவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அவர் கழிவறை சென்ற போது, பின் தொடரந்த இவர் அவரை தள்ளிவிட்டு முத்தம் கொடுத்து, அணைத்து தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார்.

நான் உனக்கு 100 டொலர் தருகிறேன் எனக்கு முத்தம் கொடு, என்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதனால் அந்த பெண் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின் விசாரணை நடத்திய பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 6-ஆம் திகதி Matthew Aimers குறிப்பிட்ட தொகை செலுத்தி பெயிலில் வந்துள்ளார். இது தொடர்பான வழக்கு வரும் 21-ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers