தொழிற்சாலை வளாகத்தில் புகுந்து வெறியாட்டம்: 5 பேர் சுட்டுக்கொலை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் தொழிற்சாலை வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் மேற்கொண்ட எதிர்த் தாக்குதலில் குறித்த நபர் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தில் உள்ள அரோரா பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொழிற்சாலை நிறைந்த பகுதியான இங்கு உள்ளூர் நேரப்படி பகல் 1.28 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் திடீரென அங்கிருந்த தொழிலாளர்களை சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் மர்மநபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் பொலிசார் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதையடுத்து, பொலிசார் நடத்திய பதிலடியில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 5 பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் பெயர் கேரி மார்ட்டின் (45) என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட கேரி மார்ட்டின் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றனர். தாக்குதலில் காயம் அடைந்த பொலிசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers