அமெரிக்காவில் டிரம்பின் அவசரநிலை பிரகடனம்: சமூக குழுக்கள் எடுத்த அதிரடி முடிவு!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் அவசரநிலை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார்.

அதில் அவர் கூறுகையில், ‘தேசிய அவசரநிலை சட்டம் பிரிவு 201-யின்படி நாட்டில் அவசர நிலையை பிறப்பிப்பதில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளேன். எல்லை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் அவசர நிலை பிறக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும், சட்ட நடவடிக்கை மூலமாக அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். எனவே, இதற்காக வழக்கு தொடரவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AP Photo/Evan Vucci

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்