கர்ப்பிணி வயிற்றை துளைத்த துப்பாக்கி குண்டு: நீதிமன்றம் அளித்த விசித்திர தீர்ப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

தென்கிழக்கு அமெரிக்காவில் தெருச்சண்டை ஒன்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு வயிற்றில் இருக்கும் பிள்ளையின் மரணத்திற்கு காரணமான பெண்ணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இந்த விசித்திர சம்பவம் நடந்தேறியுள்ளது. இதில் தெருச்சண்டையில் ஈடுபட்டு, தமது பிள்ளையின் உயிரை காப்பாற்ற அந்த பெண்மணி தவறியதாலையே 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

சம்பவத்தின்போது மார்ஷே ஜோன்ஸ் என்பவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வாகன நிறுத்தத்தில் எபனி ஜெமிசன் என்பவருடன் ஏற்பட்ட வாக்கு மோதல் துப்பாக்கிச் சூடு சம்பவமாக மாறியுள்ளது.

நீதிமன்ற விசாரணையில், தமது வயிற்றில் இருக்கும் பிள்ளையை பாதுகாக்க வேண்டியது தாயாரின் கடமை என சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,

இந்த விவகாரத்தில் மார்ஷே ஜோன்ஸ் என்பவர் ஜெமிசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், தொடர்ந்து அது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நீடித்ததற்கும் அவரே பொறுப்பு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டமானது கடுமையாக இருக்கும் நிலையில், கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு 10 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திருத்தப்பட்ட சட்டத்தில் இடம் உள்ளது.

ஆனால் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை அங்குள்ள சட்டம் தண்டிப்பதில்லை. இந்த நிலையிலேயே மார்ஷே ஜோன்ஸ் தமது பிறக்காத பிள்ளையை பாதுகாக்க தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜோன்ஸுக்கு ஆதரவாக கருக்கலைப்பை ஆதரிக்கும் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்