அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் கலிபோர்னியா மாகாணத்தை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் ரிட்ஜெக்ரெஸ்ட் அருகே டெத் வேலி தேசிய பூங்காவின் சுற்றுப்புறத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஆரம்பத்தில் 7.1 அளவில் பதிவாகியதாக தகவல்கள் பரவின. பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் 6.9 ஆக திருத்தப்பட்டது. இது 20 ஆண்டுகளில் தெற்கு கலிபோர்னியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம், முந்தைய நாளின் அதே இடத்தைத் தாக்கியது, ஆனால், இது அதைவிட சக்திவாய்ந்ததாக இருந்தது. அதன் தீவிரம் மோசமான அழிவுகரமான 1994 நார்த்ரிட்ஜ் பூகம்பத்தை விஞ்சியது என கூறப்படுகிறது, இருப்பினும் இது நகர்ப்புறத்தை தாக்காததால் சேதம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இதே பகுதியை 6.4 அளவில் நிலநடுக்கம் தாக்கியது. இந்நிலையில், இரவு தாக்கிய நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers