தாயார் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை: இளைஞருக்கு 615 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா
288Shares

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பெற்ற மகளை சீரழித்த இளைஞருக்கு எதிராக துணிச்சலுடன் தாயார் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

குறித்த தாயாரின் கண்ணீர் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஹூஸ்டன் கவுண்டி சர்க்யூட் நீதிபதி டோட் டெரிக், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 615 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அலபாமா மாகாணத்தில் காட்டன்வுட் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ரேவன் ஸ்மித். இவரே அந்த பகுதியில் உள்ள 16 வயதுக்கும் குறைவான 5 சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பல ஆண்டுகளாக துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்தவர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தாயார் மிகவும் உருக்கமான கோரிக்கையை நீதிமன்றம் முன்பு வைத்துள்ளார்.

அந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதிபதி டெரிக், குறித்த குற்றவாளிக்கு அதிகபட்ச சிறை தண்டனையை வழங்கியுள்ளார்.

விசாரணை காலகட்டத்தில் நடந்தவற்றிற்கு ரேவன் ஸ்மித் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

இருப்பினும், கண்ணீர் கோரிக்கை வைத்துள்ள அந்த தாயாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பதாக நீதிபதி டெரிக் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் மீது முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல்கள் கண்டிப்பாக உணர்ச்சிவசப்பட வைக்கும் என சிறுமிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவோன் என்ற அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் புகார் அளிக்க முன்வரவில்லை எனவும்,

ஆனால் இதுபோன்ற கொடூரர்கள் சமூகத்தில் போலியாக வலம் வருவது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என புகார் அளித்த அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்