பாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த தண்டனை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒன்பதும் 13-ம் வயதான சிறார்களை உடல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய பாதிரியாருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.

கொலம்பியா மாகாணத்தில் உள்ள வாஷிங்டன் நகரிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள கத்தோலிக்க மத குருவான 47 வயது உர்பனோ வாஸ்குவேஸ் என்பவருக்கே 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத குருவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நீதிமன்றம்,

அவரை பாதிரியார் வேடத்தில் இருக்கும் சாத்தான் என்றும் விமர்சித்துள்ளது. குறித்த பாதிரியாருக்கு மத சடங்குகளில் உதவியாக இருந்த இரு சிறார்களையே வாஸ்குவேஸ் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.

13 வயதுள்ள சிறுமியை 2015 ஆம் ஆண்டும் 9 வயதுள்ள சிறுமியை 2016 ஆம் ஆண்டும் பாதிரியார் வாஸ்குவேஸ் சீரழித்துள்ளார் என நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

தம்மை ஒரு புனிதராக காட்டிக்கொண்ட வாஸ்குவேஸ், அந்த சிறுமிகளின் வாழ்க்கையை முற்றாக மாற்றிவிட்டார் என சிறுமிகள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இரு சிறார்களையும் 9 நாட்கள் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், இருவரும் தங்கள் முன்வைத்த புகாரில் இருந்து பின்வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இரு சிறார்களின் பெற்றோருடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே பாதிரியார் வாஸ்குவேஸ். சிறுமிகளை தமது இச்சைக்கு இரையாக்கியுள்ளார்.

மட்டுமின்றி, வேறு பாதிரியார்கள் மத சடங்குகளை முன்னெடுக்கும்போது, இவர் தனி அறையில் சிறுமிகளுடன் உல்லாசத்தில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்