ப்ளோரிடாவை நெருங்கும் டோரியன் புயல்: அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்குவித்து வீட்டில் பதுங்கிய மக்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் ப்ளோரிடாவை டோரியன் என பெயரிடப்பட்டுள்ள புயல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்துவிட்டு வீடுகளுக்குள் பதுங்கியுள்ளார்கள்.

வெள்ளியன்று காலை மணிக்கு 110 மைல் வேகத்தில் காற்று வீசியது. புயல் காரணமாக சுமார் 7.5 மில்லியன் மக்கள் மின்தடையால் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயல் மேலும் வலுப்பெறலாம் என்றும், 1992ஆம் ஆண்டு ப்ளோரிடாவை சூறையாடிய ஆண்ட்ரூ புயலுக்கு இணையாக டோரியன் புயலும் இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து போனதாகவும், கார்களை அங்கேயே விட்டு விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ட்விட்டரில் மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், இது மிகவும் மோசமான புயல், தயாராகவும் இருங்கள், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்