9 வயது சிறுவனின் கொடுஞ்செயல்.... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
115Shares

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிறுவன் ஒருவனின் கொடுஞ்செயலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உடல் கருகி பலியான சம்பவத்தில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உடல் கருகி பலியானவர்களில் மூன்று சிறார்களும் இரு முதியவர்களும் என தெரியவந்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் இருந்து இதுபோன்ற இளம் வயதில் எவரும் கொடூரமான கொலை வழக்கில் சிக்கியதில்லை என மாகாண பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான சிறுவன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால் சிறுவன் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மத்திய இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Goodfield கிராமத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

ஏப்ரல் 6 ஆம் திகதி மொபைல் குடியிருப்பு ஒன்றில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீ விபத்தில் சிக்கி பலியாகினர்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நன்னடத்தை சோதனை நிலையில் வைக்கப்படலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி குறித்த சிறுவனுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்