மரணத்தோடு போராடிய கணவர்... அதே மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்த மனைவி: உருகவைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மாரடைப்புக்கு கணவனை பறிகொடுத்த அதே மருத்துவமனையில் பெண் ஒருவர் நான்கு நாட்களில் அதிசய குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் Prior Lake பகுதியில் குடியிருக்கும் கெல்சி பெர்குசன் என்பவரே நான்கு நாட்கள் இடைவெளியில் விதவையாகவும் ஒரு பிள்ளைக்கு தாயாராகவும் ஆனவர்.

இவரது கணவர் ஸ்காட் (30) அந்த வார துவக்கத்தில் இருமலுடன் வாயில் இருந்து ரத்தம் வெளியானதாகவும் கூறி மருத்துவமனையில் தானே சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

ஆனால் அவரது நிலை கண்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே ஸ்காட் மரணமடைந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான கெல்சி பெர்குசனுக்கு மருத்துவமனை படுக்கையில் தமது கணவர் கிடக்கும் காட்சி தாங்குவதிலும் அதிகமாக இருந்தது.

(Image: Kelsey Ferguson)

புதிய குடியிருப்பு, பல ஆண்டுகள் காத்திருந்து, இன்னும் சில நாட்களில் பிறக்கவிருக்கும் பிள்ளை என வாழ்க்கையின் புது அத்தியாத்தை துவக்க இருந்த தம்பதிக்கு ஸ்காட்டின் திடீர் சுகவீனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சேர்ப்பித்த சில நாட்களிலேயே மரணமடையும் அளவுக்கு அவர் உடல்நலம் குன்றியிருந்ததாக தமக்கு தெரியாது எனவும்,

இதுவரை எந்த மருத்துவரும் தங்களிடம் அவருக்கு இருக்கும் பாதிப்பு தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் கெல்சி கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார்.

மரணத்தோடு தமது கணவர் போராடும் அந்த கடைசி நொடியில் தாம் அந்த இடத்தில் இல்லாததை வாழ்க்கையில் ஒருநாளும் மறக்கமாட்டேன் என கூறியுள்ள கெல்சி,

(Image: Kelsey Ferguson)

அந்த மரண வார்த்தை அறிந்த அடுத்த இரு நாட்கள் தம்மால் உணர்வு பூர்வமாக எதையும் நினைவில் இருத்த முடியவில்லை எனவும்,

சாப்பிட்டதும், தூங்கியதும், அழுததும் எதுவும் தமக்கு நினைவில் இல்லை என கெல்சி கண்கள் தழும்ப தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிறந்த பிள்ளை இருதய பாதிப்புடன் பிறந்துள்ளதால் அதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.

குழந்தைக்கான சிகிச்சை, கணவரின் இறுதிச்சடங்கு என தவித்துப் போயுள்ளார் கெல்சி. மொத்தம் 99 நாட்கள் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்துள்ளது கெல்சியின் பிள்ளை.

(Image: Kelsey Ferguson)

தற்போது ஒரு வயது பிராயம் கொண்ட கெல்சியின் மகனுக்கு மொத்தம் 7 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் தமது மகனின் எதிர்காலம் தொடர்பில் அவருக்கு நம்பிக்கை இருப்பதாகவே தெரிவித்துள்ளார்.

தமது கணவர் ஸ்காட்டுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், ஆனால் மிகவும் தாமதமாகவே மருத்துவர்களால் அவரது நோய் கண்டறியப்பட்டது எனவும் கெல்சி தெரிவித்துள்ளார்.

(Image: Kelsey Ferguson)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்