மகனை பார்த்து கொள்ள பெண் செவிலியரை வேலைக்கு அமர்த்திய தாய்: ரகசிய கமெராவில் அவர் கண்ட அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் வாதம் நோயால் அவதிப்பட்டு வரும் மகனை பார்த்து கொள்வதற்காக, செவிலியர் ஒருவரை தாய் அனுமதித்திருந்த நிலையில், அவரின் உண்மை முகம் ரகசிய கமெரா மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் Tennessee நகரை சேர்ந்தவர் Dawn Caldwell. இவருக்கு பெரு மூளைவாதம் நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது மகன் உள்ளார். இதனால் மகனை கவனித்து கொள்வதற்காக செவிலியரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

Dawn Caldwell மற்றும் அவரது கணவர் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால், வீட்டில் மகனை கவனித்து செவிலியர் எப்படி மகனை பார்த்து கொள்கிறார் என்பதற்காக கடந்த ஜுலை மாதம் ரகசிய கமெரா ஒன்றை வீட்டினுள் பொருத்தியுள்ளர்.

அதன் பின் இருவரும் வேலைக்கு சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் Dawn Caldwell-க்கு திடீரென்று ரகசிய கமெராவில் பதிவாகியிருப்பதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

இதனால் அவர் கமெராவில் பதிவாகியிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் செவிலியராக பணியமர்த்தப்பட்டிருந்த பெண், அவரின் மகனை அடிப்பது போன்று இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அதன் பின் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்