அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடற்படைத் தளத்தில் பயிற்சி விமானி ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் புகைப்படத்துடன் முழு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பென்சகோலா பகுதியில் கடற்படை தளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கடற்படை தளத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் பயிற்சி கடற்படை வீரர் ஒருவர் திடீரென அங்கு பணியில் இருந்து வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் பாடுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை சுட்டுக்கொன்றனர்.
குறித்த நபர் சவுதி அரேபிய நாட்டவர் என்பதும், சமீபத்தில் பயிற்சிக்காக அமெரிக்கா வந்து சேர்ந்த 20 ராயல் சவுதி கடற்படை அதிகாரிகளில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.
பென்சகோலா கடற்படை தளத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது தீவிரவாதம் தொடர்புடையதா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 155 நாடுகளை சேர்ந்த சுமார் 62,700 வெளிநாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது.