சிறுநீருக்கு பதில் ஆல்கஹாலை வெளியேற்றிய பெண்: மதுவுக்கு அடிமை என்று எண்ணிய மருத்துவர்கள்: உலகின் முதல் நிகழ்வு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பெனிசில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொருமுறை சிறுநீர் பரிசோதனை செய்யும்போதும் அதில் ஆல்கஹால் இருந்ததால், அவர் மதுவுக்கு அடிமை என்ற முடிவுக்கு வந்தனர் மருத்துவர்கள்.

ஆனால், அவர் உடலில் ஒரு அபூர்வ நிகழ்வு நிகழ்கிறது என்ற உண்மை தெரியவந்தபோது, அவரிடம் தங்கள் தவறுக்காக வருத்தம் தெரிவித்து, மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, மருத்துவ உலகுக்கே ஒரு எச்சரிக்கை செய்தியைக் கூறியுள்ளார்கள் அந்த மருத்துவர்கள்.

61 வயது பெண் ஒருவர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டதால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார்.

அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம், சிறுநீருக்கு பதில் அவர் ஆல்கஹாலையே வெளியேற்றுகிறார் என்று கூறும் அளவுக்கு அவரது சிறுநீரில் ஆல்கஹால் இருந்துள்ளது.

ஆகவே, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவர் ஒரு மதுபான அடிமை என்று எண்ணி, தங்களிடம் அவர் உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

அவரோ தொடர்ந்து மறுப்புத் தெரிவிக்க, அதற்குப்பின் மருத்துவமனையில் அவரை தங்கவைத்து பரிசோதனைகள் செய்தபோது மருத்துவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

ஒரு சொட்டு மதுபானம் கூட குடிக்காமல் இருந்தும்,அந்த பெண் தனது சிறுநீரில் ஆல்கஹாலை வெளியேற்றினார்.

ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் தொடர்ந்து அவரை ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது உலகிலேயே முதல் முறையாக அவரது உடலில் ஒரு ஆச்சரிய நிகழ்வு நிகழ்வதைக் கண்டு திகைத்துப்போனார்கள் மருத்துவர்கள்.

அதாவது, அந்த பெண் எப்போதெல்லாம் சர்க்கரை உணவுகள் உண்கிறாரோ, அப்போதெல்லாம், அவரது சிறுநீரகப் பையில் தங்கியிருக்கும் ஒருவகை பூஞ்சைக் காளான், அந்த சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றிவிடுகிறது.

ஆக, அவர் சிறுநீர் கழிக்கும்போது எல்லாம் ஆல்கஹால் வெளியேறியுள்ளது. பின்னர்,அந்த பூஞ்சைக் காளானை கொல்ல அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

அவரை தவறாக குற்றம் சாட்டியதற்காக வருந்திய மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுற்றறிக்கையில், இந்த பிரச்சனையால் எவ்வளவு எளிதாக ஒரு நோயாளியை தவறாக புரிந்துகொண்டுவிடுகிறோம் என்பதை விளக்கியுள்ளார்கள்.

அத்துடன், உலகில் உள்ள மற்ற மருத்துவர்களுக்கு, இப்படி ஒரு பிரச்சனை உள்ளது என்பதை தெரியப்படுத்தி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளை தவறாக மதுபான அடிமைகள் என்று குற்றம்சாட்டிவிடாமல் கவனமாக செயல்படுமாறும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்