கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம்! பகிரங்கமாக கூறிய அமெரிக்கா

Report Print Santhan in அமெரிக்கா

சீனா செய்த தவறுக்காக உலக நாடுகள் இப்போது பெரும் விலையை கொடுத்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது ஒருவித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக மாறி வருகிறது.

இந்த நோய்க்கு இன்று காலை நிலவரப்படி உலக அளவில் 276,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,417 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் 81,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3,255 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியை இந்த கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது, உயிரிழப்பில் சீனாவை இத்தாலி மிஞ்சிவிட்டது.

இதை தொடர்ந்து, ஈரான்,ஸ்பெயின், அமெரிக்கா,ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் கொரோனா தன்னுடைய ஆட்டத்தை காட்டி வருவதால், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், சீனா செய்த தவறுக்கு உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம், கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று டிரம்ப் ஏற்கனவே பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீனா செய்த தவறே கொரோனாவுக்கு காரணம் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டிரம்ப், சீன வைரசின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்குத் தெரியும் இதனால், சிலர் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்