கொரோனாவை தடுக்கும் மத்திரையை வழங்கி கையும் களவுமாக சிக்கிய நபர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனாவை தடுக்கும் மருந்தை உருவாக்கிவிட்டதாக கூறி பண மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கினார்.

கொரோனா வைரஸைத் தடுக்கும் மாத்திரையை சந்தைப்படுத்த தனது நிறுவனத்தில் முதலீடுகளைக் கோரிய குற்றத்திற்காக தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

53 வயதான கீத் லாரன்ஸ் மிடில் ப்ரூக் என்ற நபரே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான புகாரில், தனிப்பட்ட முறையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் சிகிச்சையை உருவாக்கியதாகவும், அதற்கான காப்புரிமை நிலுவையில் உள்ளது என கூறி முதலீடு பெற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ப்ரூக் முதலீட்டாளர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் சிகிச்சைக்கான மாத்திரைகள் வழங்கியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் முதலீட்டாளர் போல் கலந்துக்கொண்ட பொலிஸுடன் தொடர்பில் இருந்த ரகசிய முகவர் அளித்த தகவலை அடுத்து கூட்டத்தின் போது மிடில் ப்ரூக் கைது செய்யப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்