முன்னாள் காதலன் மிரட்டியதால் பொலிசாருக்கு அந்தரங்க படங்களை சாட்சியமாக அனுப்பிய இளம்பெண்: ஆனால் பொலிசார் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக முன்னாள் காதலன் மிரட்டியதால் பொலிசாரிடம் புகாரளித்த ஒரு இளம்பெண், வழக்கில் சாட்சியமாக பயன்படலாம் என்பதற்காக அந்த புகைப்படங்களை பொலிசாருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் Utah பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது.

Lauren McCluskey (21) என்ற அந்த இளம்பெண்ணின் முன்னாள் காதலனான Melvin Rowland (37) என்பவர், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாகவும், அப்படி வெளியிடாமல் இருக்கவேண்டுமானால் தனக்கு 1000 டொலர்கள் கொடுக்கவேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார்.

Miguel Deras என்ற பொலிசாரிடம் இது குறித்து புகாரளித்த Lauren, Melvin அனுப்பிய மிரட்டல் குறுஞ்செய்திகளையும், Melvin எந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டினாரோ அந்த புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அந்த படங்களை தனது மொபைலில் பதிவு செய்துகொண்ட அந்த பொலிசார் (Deras), அதை தனது சகாக்களிடம் காட்டி, தான் எப்போது வேண்டுமானாலும் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பார்த்து ரசிக்கமுடியும் என்று கூறி பெருமையடித்துக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், Melvin, Laurenஐ சுட்டுக்கொன்றுவிட்டார். சுட்டுவிட்டு தப்பியோடிய Melvin தன்னைத்தான் சுட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.

பொலிசாரான Deras, சரியான நேரத்திற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலிகளை தடுத்திருக்கலாம்.

Laurenஇன் புகார் மீது நடவடிக்கையும் எடுக்காமல், அவரது அந்தரங்க புகைப்படங்களையும் தவறாக பயன்படுத்தியதற்காக அவரது பெற்றோர் Deras மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்