ஒட்டுமொத்த அமெரிக்காவும் போராட்டத்தில்... ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், அவரது வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் பொலிசார் பிடியில் கழுத்து நெரிபட்டு இறந்தார் என்பது உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது.

மட்டுமின்றி இவை அனைத்தும் 20 டொலர் கள்ளநோட்டு விவகாரத்தில் துவங்கியுள்ளது.

சிகரட் வாங்குவதற்காக ஜார்ஜ் ஃபிளாய்ட் கொடுத்த 20 டொலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், உடனடியாக பொலிசாருக்கு அந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

டெக்சாஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் தொழில் நிமித்தம் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாக மினியபொலிஸ் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று அபுமாயலே என்பவரின் கப் புட் என்ற கடையிலேயே ஜார்ஜ் சிகரட் வாங்க சென்றுள்ளார்.

அப்போது கடையில் இருந்த பதின்ம வயது இளைஞரே, சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சுமார் 8 மணிக்கு அவசர உதவி இலக்கத்தை தொடர்புகொண்ட கடைக்கார இளைஞர், ஜார்ஜ் ஃப்ளாய்ட் அளித்தது கள்ள நோட்டு என்ற சந்தேகத்தின் பெயரில் அவருக்கு வழங்கிய சிகரெட்டை திரும்ப கேட்டதாகவும், ஆனால் அவர் அதை வழங்க மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

மட்டுமின்றி அதே வேளை ஜார்ஜ் நன்கு மது அருந்தியிருந்ததாகவும் அந்த இளைஞர் புகாரில் தெரிவித்திருந்தார்.

தகவல் அறிந்து சுமார் 8 நிமிடத்தில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு பேருடன் அமர்ந்திருந்த ஜார்ஜ் ஃப்ளாய்டை நெருங்கியுள்ளார்.

பின்னர் தாமஸ் லேன் என்ற காவலர் தனது துப்பாக்கியை எடுத்ததுடன், கைகளைக் காட்டுமாறும் ஜார்ஜ் ஃப்ளாய்டிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவரை காரில் இருந்து வெளியே இழுத்து, முரண்டு பிடித்த அவருக்கு கைவிலங்கு போட்ட பிறகே,

கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்படுவதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடந்த கைகலப்பில் ஜார்ஜ் கீழே விழவும், அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை ரோந்து வாகனத்தில் ஏற்ற மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து முயன்றுள்ளார்.

ஆனால் நிலைமை கைவ்விட்டு போய்விடும் என உணர்ந்த சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே காலை வைத்து அழுத்தினார்.

எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார்.

இதில் முதல் 6 நிமிடத்திலே ஜார்ஜ் ஃப்ளாய்ட் அசைவற்ற நிலைக்கு வந்தார். அங்கிருந்த பலர் ஃப்ளாய்ட்டின் நாடித்துடிப்பைப் பார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

இரவு 8.27 மணிக்கு காவலர் சாவின் தனது காலை ஃப்ளாய்ட்டின் கழுத்தில் இருந்து எடுத்துள்ளார்.

பின்னர் ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஃப்ளாய்ட் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே அவர் இறந்துவிட்டதாக ஒரு மணி நேரம் கழித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்