ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் மறுபடியும் ஊக்கத்தொகை அறிவித்த ஜனாதிபதி டிரம்ப்: எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொடர்பான ஊக்கத்தொகையை இரண்டாவது முறையாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி டிரம்ப்.

இதனால் தம்பதிகள் ஒவ்வொருவரும் 2,400 டொலர் தொகையை ஊக்கத்தொகையாக மிக விரைவில் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

குடியரசுக்கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர், இந்த ஊக்கத்தொகை விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும், தாமதமின்றி அதை இந்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனும், அமெரிக்க மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பில் தமது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக கொரோனா நெருக்கடியால் அல்லல்படும் அமெரிக்க மக்களுக்கு உடனடியாக பொருளாதார உதவியை அளிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

பைடன் அறிவித்த ஊக்கத்தொகை தொடர்பான கருத்துக்கு நாட்டின் முதன்மை பொருளாதார நிபுணர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அது 1,200 டொலருக்கும் குறைவாக இருக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, தற்போது டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள ஊக்கத்தொகையானது, தனியாக வாழும் அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 1200 டொலர் ஊக்கத்தொகையாக பெற உள்ளனர்.

ஆனால், திருமணமான தம்பதிகள் அதிகபட்சம் 2,400 டொலர் ஊக்கத்தொகை பெற உள்ளனர்.

மட்டுமின்றி, இன்னொரு பெற்றோரின் குழந்தை உங்கள் பொறுப்பில் வளர்கிறது என்றால், மேலும் ஒரு 500 டொலர் ஊக்கத்தொகையாக பெறலாம்.

இதனால் திருமணமான தம்பதிகள் இந்த முறை ஊக்கத்தொகையாக சுமார் 3,400 டொலர் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்