பயங்கர குண்டுவெடிப்பால் அமெரிக்க நகரை உலுக்கிய நபரின் புகைப்படம் வெளியீடு! தாக்குதலுக்கு முன் நெருங்கியவர்களிடம் கூறிய காரணம்

Report Print Basu in அமெரிக்கா
395Shares

அமெரிக்காவின் Tennessee மாநிலம் Nashville நகரத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் அன்று Nashville நகரத்தில் கேளிக்கை வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேளிக்கை வாகனம் வெடித்து சிதறியதில் அப்பகுதியிலிருந்து வீடுகள் சேதமடைந்தன, 3 பேர் காயமடைந்தனர் என பொலிசார் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டனர்.

சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், குண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்தாக தெரிவித்தனர்.

இந்நிலையில், Nashville நகரில் தற்கொலை தாக்குதலில் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர் 63 வயதான கணினி தொழில்நுட்ப வல்லுநர் Anthony Quinn Warner என விசாரணை மேற்கொண்டு வந்த FBI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சம்பவயிடத்தில் கண்டுடெடுக்கப்பட்ட உடல்பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டதில், அது Warner-ரின் உடல்பாகம் என உறுதியானதாக FBI தெரிவித்துள்ளது.

எனினும், Warner இத்தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்த இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் Warner, AT&T தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

AT&T நிறுவனத்தின் 5G தொழில்நுட்பம் மக்களைக் கொன்றுவிடுவதாக நம்பியதால் Warner இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

AT&T நிறுவனம் வாங்கிய பெல்சவுத் நிறுவனத்தில் பணிபுரிந்த Warner-ன் தந்தை முதுமை நோயால் இறந்தார். அவரது தந்தையின் மரணம் காரணமாக வார்னர் 5G தொழில்நுட்பத்திற்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தூண்டுதலாக இருந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

பிராந்தியத்தில் நடந்த அனைத்து இறப்புகளுக்கும் 5G தான் காரணம் என்று Warner நம்பினார் என நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், AT&T நிறுவனம் மீது தான் தாக்குதல் நடத்திய பின் மக்கள் தன்னை ஹீரோ என கொண்டாடுவார்கள் என தாக்குதலுக்கு முன் Warner கூறியதாக நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்