தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர் பலி... தடுப்பூசி தொடர்பில் முதல் நேரடி மரணம்: விசாரணையில் இறங்கியது பைசர் நிறுவனம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
3863Shares

நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்த ஒரு மருத்துவர் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியாமியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான Gregory Michael(56) என்பவருக்கு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்படுவதற்கு முன் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதில் Michaelக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்ததாக கூறுகிறார் அவரது மனைவியான Heidi Neckelmann.

தடுப்பூசி போட்டு மூன்று நாட்களுக்குப்பின், குளிக்கும்போது, தனது தோலில் சிவப்புப் புள்ளிகள் உருவாகியிருப்பதைக் கவனித்துள்ளார் Michael.

உடனே மருத்துவமனைக்கு சென்ற Michaelஐ பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், Michael உடலில் இரத்தம் உறைவதற்கு தேவையான அணுக்களான இரத்த தட்டுகள் எனப்படும் platelets ஒன்று கூட இல்லை.

சாதாரணமாக ஒருவர் உடலில் ஒரு மைக்ரோலிற்றர் இரத்தத்திலேயே 150,000 முதல் 450,000 இரத்த தட்டுகள் இருக்கும்.

பரிசோதனையில் ஏதோ தவறோ என மீண்டும் பரிசோதிக்க, இரண்டாவதுமுறை பரிசோதித்ததில், ஒரு மைக்ரோலிற்றர் இரத்தத்தில் ஒரே ஒரு இரத்தத்தட்டு மட்டுமே இருந்துள்ளது.

உடனே, அந்த அணுக்களை அதிகரிப்பதற்காக இரத்தம் ஏற்றுவது முதல் மருந்துகள் கொடுப்பது வரை ஏதேதோ செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.

ஆனால், எதுவும் பலனின்றி, மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய் ஒன்று வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார் Michael.

தனது கணவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சினைகள் உட்பட எந்த பிரச்சினையும் இருந்ததில்லை என உறுதியாக கூறும் Michaelஇன் மனைவி Heidi, அவரது மரணத்துக்கு 100 சதவிகிதம் தடுப்பூசிதான் காரணம் என்கிறார்.

அவர் கூறுவது உண்மையானால், உலகிலேயே தடுப்பூசி தொடர்பில் முதல் மரணம் Michael உடையது தான்!

இதற்கிடையில், பைசர் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர், Michaelஇன் மரணம் தொடர்பாக தங்கள் நிறுவனம் ஆய்வு செய்துவருவதாகவும், அவரது மரணத்துக்கு தடுப்பூசி காரணம் என தாங்கள் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்