கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் அடைக்கலம்: பல மாதங்களுக்கு பிறகு கைதான இந்திய வம்சாவளி நபர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
254Shares

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பயந்து விமான நிலையம் ஒன்றில் பதுங்கியிருந்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் குடியிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 36 வயதான ஆதித்யா சிங்.

இவரையே சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் பதுங்கியிருந்ததாக கூறி பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிகாகோவுக்கு சென்றுள்ளார் ஆதித்யா சிங்.

ஆனால் கொரோனா பரவல் தொடர்பில் தகவல் அறிந்த அவர், விமான பயணத்தால் கொரோனா பாதிக்கப்படலாம் என அஞ்சியுள்ளார்.

அதன் பின்னர், சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி விமான நிலைய ஊழியர் போன்று அவர் நடந்து கொண்டுள்ளார். ஆனால் அக்டோபர் 26 அன்று ஊழியர் ஒருவரின் அடையாள அட்டை காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சாப்பிட்டு, மீதமிருந்த உணவுகளை சாப்பிட்டே ஆதித்யா இத்தனை மாதங்களாக பசியாற்றியுள்ளார்.

சனிக்கிழமை பகல், தாம் அணிந்திருந்த முக கவசத்தை அப்புறப்படுத்திய நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள், ஞாயிறன்று நீதிமன்றத்தில் அவரை நிறுத்தியுள்ளனர்.

அவருக்கு எதிரான கிற்றப்பின்னணி ஏதும் இல்லாத நிலையில், தற்போது விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

விருந்தோம்பலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆதித்யா சிங், தற்போது வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்