அமெரிக்காவின் துணை அதிபரானார் தமிழக வம்சாவளி கமலா ஹாரிஸ்! அவர் ஏன் ஊதா நிற ஆடை அணிந்து வந்திருந்தார் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா
1102Shares

அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் உரிமையை பெற்றார்.

இதையடுத்து இன்று அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார்.

உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலித்த பின்னர் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு கமலா ஹாரிஸ் ஊதா நிற ஆடை அணிந்து வந்திருந்தார். அதற்கு ஒரு காரணம் இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், உலகிலேயே முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து என்ற பெருமை கொண்டது.

ஆனால் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு 19-ஆம் நூற்றாண்டில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் பல தசாப்த கால போராட்டம் ஆகும்.

இப்போது முதல் முறையாக அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ். வாக்குரிமைக்கு போராடிய ஒரு இனம் இன்று துணை அதிபர் பொறுப்பில் அமர்கிறது. இதை அழகாக தனது ஆடை மூலம் பிரதிபலித்துள்ளார் கமலா ஹாரிஸ்.

ஜோ பிடன் மனைவி, ஜில் நேற்று ஊதா நிற ஆடை அணிந்திருந்தார். மிட்சேல் ஒபாமா, கிளாரி கிளிண்டனும் இன்று ஊதா நிற ஆடை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்