என் பிறந்தநாளுக்கு வந்த அப்பா எல்லோரையும் சுட்டுவிட்டார்: இரகசியமாக பொலிசாரை அழைத்த சிறுமி

Report Print Balamanuvelan in அமெரிக்கா
0Shares

அமெரிக்காவில், என் பிறந்தநாளுக்கு வந்த அப்பா எல்லோரையும் சுட்டுவிட்டார் என்று கூறி, அவசர உதவியை அழைத்தாள் ஒரு 9 வயது சிறுமி.

பதற்றத்துடன் இரகசியமாக பேசிய சிறுமியின் அழைப்பைக் கேட்டு நியூயார்க்கில் இருந்த அந்த முகவரிக்கு விரைந்தனர் பொலிசார்.

அவர்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, அந்த வீட்டுக்குள் Rasheeda Barzey (45) என்ற பெண், அவரது இரண்டு மகள்களான Chloe Spears (16) மற்றும் Solei Spears (20) ஆகியோர் துப்பாக்கிக் குண்டுக் காயாங்களுடன் இறந்து கிடந்தார்கள்.

பொலிசார் தங்களை அழைத்த சிறுமியைத் தேட, அலமாரி ஒன்றிற்குள் பதுங்கியிருந்தாள் அந்த 9 வயது சிறுமி.

எனக்கு பெற்றோர் இல்லையே என அவள் கதறியதைக் கேட்டு மனதே உடைந்துபோனது என்கிறார் பொலிசார் ஒருவர்.

நடந்தது என்னவென்றால் அந்த சிறுமியின் தந்தையான Joseph McCrimon (46)க்கும், தாயான Rasheedaவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்துள்ளது.

அன்று அந்த சிறுமியின் பிறந்தநாளுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார் Joseph. என்ன நடந்ததோ தெரியாது, துப்பாக்கியை எடுத்து மனைவியையும் அவரது மகள்களையும் சுட்டுக்கொன்றுவிட்டார்.

அந்த இரண்டு மகள்களும் Josephக்கு பிறந்தவர்கள் இல்லை, Rasheedaவின் முந்தைய திருமணத்தில் பிறந்தவர்கள் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

சிறுமியை மீட்ட பொலிசார், அந்த வீட்டுக்கு சற்று தொலைவில் Josephம் தலையில் குண்டுக்காயங்களுடன் இறந்துகிடந்ததைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆக, அவள் சொன்னதுபோலவே ஒரே நாளில் தனக்கிருந்த மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டாள் அந்த சிறுமி.

ஏற்கனவே பல குற்றச்செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவரான Joseph, இப்போது தனக்கு இருந்த ஒரே உறவையும் அநாதரவாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு குற்றமும் செய்யாத அவரது சின்னஞ்சிறு மகளோ, வாழ்நாளெல்லாம் அந்த வலியையும் வெறுமையையும் அனுபவிக்கவேண்டும்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்