திருகோணமலையில் அடை மழை காரணமாக மக்கள் பாதிப்பு

Report Print Gokulan Gokulan in காலநிலை

திருகோணமலை மாவட்டம் முழுதும் இன்று அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தேர்ச்சியான 24 மணி நேர அடை மழை காரணமாக மீனவர்கள், விவசாயிகள், கால் நடை வளர்ப்பாளர்கள், கூலித் தொழிலாளிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, கந்தளாய் குச்சவெளி மூதூர் தம்பலகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடை மழை காரணமாக சில வீதிகள் உட்பட தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாய நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் சம்மேளனங்கள் தெரிவிக்கின்றன.

இவ் பாதிப்புக்கள் தொடர்பில் உரிய அரச அதிகாரிகள் மக்களின் விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அரச நிவாரண உதவிகளை வழங்க முன்வருமாறு பாதிப்படைந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...