பெண்களின் அந்தரங்க உறுப்பில் நாற்றம் வீசுவதன் காரணம் தெரியுமா?

Report Print Kavitha in பெண்கள்

அந்தரங்க உறுப்பில் உண்டாகும் ஒருவித திரவக் கசிவும் பாக்டீரியாவும் சேர்ந்து அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை 4.5 அளவில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஒருவித வாடை வருவது இயல்புதான்.

பொதுவாக அந்தரங்கப் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களே இருக்கும். அரிதாக அவை தொந்தரவு செய்யப்பட்டால் ஆரோக்கியமற்ற Bacterial Vaginosis (BV) வரும். இது தாக்கினால் சாம்பல் நிறக் கசிவு, துர்வாடை இருக்கும் எனப்படுகின்றது

இதை அலட்சியப்படுத்தினால் தீவிரத் தொற்றில் கொண்டு போய் விடும்.

அந்தவைகயில் வாடை அடிப்பது ஏன்? அதனை எப்படி தடுக்கலாம் என இங்கு பார்ப்போம்.

வாடை அடிப்பது ஏன்?
  • வெங்காயம், பூண்டு, கரம் மசாலா போன்ற கடுமையான வாசனை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடலிலும் அந்தரங்க உறுப்புகளிலும் துர்வாடை ஏற்படுகின்றது எனப்படுகின்றது.
  • ஆன்ட்டிபயாடிக்கோ, மருந்துகளோ எடுத்துக் கொள்ளும் போது, அந்தரங்க உறுப்பின் பி.ஹெச் அளவு மாறி வாடையைக் கிளப்பலாம்.
  • சிலவகை ஒவ்வாமை மருந்துகளாலும் அந்தரங்க உறுப்பு அளவுக்கதிகமாக வறண்டு, கெட்ட வாடையைத் தூண்டலாம்.
  • அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள சருமத்திலும் அதிகம் வியர்ப்பதனால் அந்த வியர்வையும் அந்தரங்க உறுப்புக் கசிவும் சேரும்போது வாடையை உண்டாக்கலாம்.
  • மாதவிலக்குச் சுழற்சியின் போது இந்த வாடையில் மாற்றங்கள் தெரியும்.
  • கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளும் பிறப்புறுப்பின் பி.ஹெச் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தி, வாடையை ஏற்படுத்தும்.
  • மெமனோபாஸும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஈஸ்ட் தொற்று மற்றும் Bacterial Vaginosis ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.
  • நீண்ட நேரமாக மாற்றப்படாத நாப்கின் மற்றும் டாம்பூன்கள் கொடுமையான வாடையை ஏற்படுத்தும். ரத்தப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பழைய நாப்கின்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை வாடையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீவிரமான தொற்றையும் உண்டாக்கி விடும்.
தீர்வு என்ன?
  • அந்தரங்க உறுப்பை சுற்றி ஏற்படுத் வியர்வை தடுக்க வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மாதிரியான வியர்வை சிந்தும் வேலைகளுக்குப் பிறகு உடனடியாக உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.
  • நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையே பிரச்னையில் இருந்து விடுபடும் முதல் வழி. மிகவும் மைல்டான சோப்பு உபயோகித்து அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, இருமுறை உள்ளாடைகளை மாற்றுவது போன்றவையும் அவசியம்.
குறிப்பு

வாடையை நீக்க நீங்களாகவே கடைகளில் விற்கும் சென்ட், மருந்துகள், வாசனை சோப்பு, அரோமா ஆயில் போன்றவற்றை உபயோகிக்கக்கூடாது.

அவை எல்லாம் பி.ஹெச் அளவை தாறுமாறாக மாற்றி, பிரச்னையை அதிகப்படுத்தும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers