இணையத்தில் நீங்கள் தான் டாப்பா? அப்ப இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் பார்க்கலாம்?

Report Print Santhan in உலகம்

தற்போது இணையத்தில் வரும் ஒரு கேள்விக்குத் தான் விடை தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.

இணையத்தில் புதிர் கணக்குகளை போடுவதில் புகழ் பெற்றவரான அன்ட்லி லேமண்ட் ஸ்டெடன்.

இவர் போடும் கணக்குகள் எல்லாம் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் அதற்கான விடை கொண்டு வருவதில் நம்மை யோசிக்க வைத்துவிடும்.

இந்நிலையில் மீண்டும் இணையத்தில் உள்ள நெட்டிசன்களுக்கு ஒரு புதிர் போட்டுள்ளார்.

அதில் 1 முதல் 9 வரையிலான எண்கள் 3x3 கட்டத்தில் வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள குறிப்பில், தவறை கண்டறிந்தால் உடனடியாக பதிலளிக்கவும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

எண்களில் எல்லாம் சரியாக இருப்பதாகவே தோன்றும் இந்த புதிரில், நிச்சயம் தவறு இருப்பதாக லேமண்ட் ஸ்டேடன் கூறுகிறார்.

ஆனால் இதற்கு உரிய பதிலை நெட்டிசன்களால் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் இப்புகைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் கடந்து விட்டதால் நெட்டிசன் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவவிட்டு இதற்கு நீங்களாவது விடை கூறுங்களே என்ற அளவிற்கு வந்துள்ளனர். இதைப் பற்றி தங்களுக்கும் விடை தெரிந்தால், உடனே அதை பகிருங்கள்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments