செயலிழந்தது வாட்ஸ் அப்: அதிர்ச்சியில் பயனர்கள்

Report Print Arbin Arbin in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்த சம்பவம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உருவாகி உள்ளது. உலகின் மிக பிரபலமான குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக வாட்ஸ் அப் உருவாகியுள்ளது.

advertisement

இந்நிலையில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ் அப் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை வாட்ஸ் அப் ட்ராக் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வாட்ஸ் அப் நிறுவனம், சோதனை முயற்சியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த பதிப்பினை விண்டோஸ் ஃபோன்களில் தரவிறக்கம் செய்யும்போது 'மீடியா கோப்பு'களை பெறுவதில் சிக்கல் உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல் 'வாட்ஸ் அப்' பில் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டது.

பயனாளர்களின் குற்றச்சாட்டுக்கு, சரியான முறையில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, 'வாட்ஸ் அப் பீட்டா 2.17.140' பதிப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை எனவே இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யவேண்டாம் என்று வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு பதில் சொன்னது.

இரண்டுநாட்களுக்கு முன்னர் இப்படியோர் அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில்தான் இன்று அதிகாலை அதன் சேவை முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது.

மாற்றத்துக்கான புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது 'வாட்ஸ் அப் பீட்டா 2.17.140' பதிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல் போன்ற காரணங்களால் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments