மகளை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை: மனதை உருக வைக்கும் வீடியோ

Report Print Basu in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் 22 உயிர்களை பலிகொண்ட கோர விபத்தில் தந்தை ஒருவர் உயிர் தியாகம் செய்து தனது குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.

ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள வென்ஜோ பகுதியல் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கட்டிட குவியலில் சுமார் 12 மணிநேரம் உயிருக்கு போராடிய 4 வயது பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளது. குழந்தை உயிர் பிழைத்ததற்கு முக்கிய காரணம் அவரின் 26 வயது தந்தை என கூறப்படுகிறது.

தனது மகள் உயிர் வாழும் அளவிற்கு ஒரு இடத்தை உடல் மூலம் பாதுகாப்பாக அமைத்து தனது உயிரை அவர் தியாகம் செய்துள்ளார் என மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தாயின் உடல் குழந்தைக்கு அருகேயே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments