தனுசு ராசி அன்பர்களே நட்பு வட்டம் விரிவடையும் நாள்..!

Report Print Aravinth in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com
மேஷம்

மனக்கசப்பு மாறி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

ரிஷபம்

தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

மிதுனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.

கடகம்

பயணத்தால் பலன் கிடைக்கும். நாள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசித்துச் செய்வது நல்லது.

சிம்மம்

வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். உன்னதமான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காக வந்து சேரும்.

கன்னி

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

துலாம்

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

விருச்சிகம்

பரபரப்பாகச் செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். உடல்நலனில் அக்கறை தேவை.

தனுசு

நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வராத உறவினர்கள் உங்கள் வீடுகளுக்கு திடீரென வருவர். தொழிலில் மாற்றினத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். உறவினர்கள பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

கும்பம்

இனிமையான நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.

மீனம்

எடுத்த முயற்சிகள் எளிதில் முடியும் நாள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கூடும். பேச்சில் கனிவு பிறக்கும். வாகனப் பழுதுகளை தவிர்க்க புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments