தீப்பற்றி எரிந்த வீட்டில் சிக்கிய குழந்தை: காப்பாற்ற முடியாமல் தவித்த தந்தை

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து 5 மாத பச்சிளம் குழந்தை தீயில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தம்பதி இருவர் தங்களது 5 மாதக் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கணவர் தரை தளத்திலும், மனைவி மற்றும் குழந்தை முதல் தளத்திலும் படுத்து உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கணவர் எழுந்தபோது வீடு தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதிர்ச்சியில் வீட்டிற்கு வெளியே சென்ற அவர் மீண்டும் உள்ளே சென்று தனது குழந்தையையும் மனைவியையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், தீ வேகமாக பரவியதால் அவரால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று போராடியும் அவரால் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை.

எனினும், வீட்டிற்குள் இருந்த மற்ற 6 பேர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக உள்ளே சென்று தாயாரையும், குழந்தையையும் வெளியே தூக்கி வந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதித்தபோது கரும்புகையை அதிகமாக சுவாசித்த காரணத்தினால் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாயாருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தந்தை பேசியபோது, ‘4 ஆண்டுகளாக தவம் இருந்து குழந்தையை பெற்றோம். ஆனால், இப்போது தீயில் கருகி உயிரிழந்துவிட்டது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பொலிசார் விசாரணையை தொடங்கியபோது, ‘தீவிபத்து இயற்கையாக நிகழவில்லை. யாரோ ஒரு நபர் திட்டமிட்டு வீட்டில் தீவைத்துள்ளார்.

ஒரு குழந்தையின் உயிரை பறித்து அந்த மர்ம நபரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம்’ என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்