உயிரிழந்த வீரர் உறுப்புகள் தானம்: கனடா மக்களை நெகிழ வைத்த உண்மை சம்பவம்

Report Print Balamanuvelan in கனடா
260Shares
260Shares
lankasrimarket.com

பேருந்து விபத்தில் சிக்கிய ஜூனியர் ஹாக்கி வீரர் Humboldt Broncos இறப்பதற்குமுன் தனது உடல் உறுப்புகளை தான் வாழ்ந்த நாட்டிற்கு தானமாக கொடுத்துச் சென்றுள்ளார்.

அவரது உடல் உறுப்புகளைப் பெற்றவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக திடீரென்று கனடாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னிருந்ததைவிட வார இறுதியில் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக British Columbiaவின் உறுப்பு தான ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் Ontario அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை மட்டும் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Humboldtஇன் ஞானத்தந்தையான Neil Langevin, ஆறு பேர் Humboldtஇன் உடல் உறுப்புகளைப் பெற இருப்பதாகவும் அவரது மீதி உடல் பாகங்கள் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

சில வாரங்களுக்குமுன் Humboldt தனது 21 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

அவரது இந்த செயல் அவரது தன்னலமற்ற குணத்தையும் மற்றவர்கள் மீது அவர் வைத்திருந்த இரக்க சுபாவத்தையும் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

Humboldtஇன் முன்மாதிரியைப் பின்பற்றி 182பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக ஞாயிற்றுக் கிழமை பதிவு செய்துள்ளதாக Ontarioவின் Trillium Gift of Life Networkஇன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

British Columbiaவில் 363பேர் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில் Humboldtஇன் சிறுநீரகத்தை தானமாக பெற்ற பெண் ஒருவரின் உறவினர் தனது அத்தைக்கு Humboldt கொடுத்த வாழ்வுக்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்