கனடாவில் இலங்கை இளைஞர் வெட்டிக் கொலை: பொலிசார் வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் இலங்கை இளைஞர் உள்ளிட்ட 8 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் விசாரணை அதிகாரிகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குறித்த கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், தற்போது வெளிவந்து பகீர் கிளப்பியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்துள்ளதாக இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே கனடாவில் மர்ம நபரால் கொல்லப்பட்டவர்.

குறித்த நபர் தமக்குத் தெரிந்த முகவர் தொடர்பில் கப்பலில் கனடா சென்றுள்ளார். மட்டுமின்றி கனடாவில் உள்ள அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ இலங்கையிலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கனடாவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் கனேடிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது அவர்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் என்பது அங்குள்ள உறவினர்களிடம் பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்து உறுதி செய்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்