துப்பாக்கி வாங்குவதற்கு தவறாக உரிமம் வழங்கிவிட்டு 12 ஆண்டுகள் கவனிக்காமல் விட்ட கனடா பொலிஸ்

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

துப்பாக்கி வாங்குவதற்கு தவறாக உரிமம் வழங்கிவிட்டு 12 ஆண்டுகள் கவனிக்காமல் விட்ட கனடா பொலிஸ் துறை தற்போது அவைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட வேடிக்கையான சம்பவம் கனடாவில் நடைபெற்றுள்ளது.

கனடா பொலிஸ் துறையின் இந்த தவறினால் தடை செய்யப்பட்ட 114 துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதும் அவை 12 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் விடப்படதும் தெரிய வந்துள்ளது.

கனடா பொலிஸ் துறை 1,356 பேருக்கு தடை செய்யப்பட்ட வகை கைத்துப்பாக்கிகளை வாங்குவதற்கான உரிமங்களை தவறுதலாக வழங்கியது.

அவர்களில் 41 பேர் அந்த உரிமங்களை பயன்படுத்தி 114 துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர்.

துப்பாக்கி வாங்கியவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு கனடா பொலிஸ் துறை கேட்டுக்கொண்டுள்ளது, ஆனால் 14 துப்பாக்கிகள் எங்கிருக்கின்றன என்பதே தெரியவில்லை.

வாங்கிய துப்பாக்கிகளை பலர் வேறொருவர் பேருக்கு மாற்றி விட்டார்கள், சிலர் ஏற்றுமதி செய்து விட்டார்கள், சிலர் பொலிசாரிடம் திருப்பி அளித்து விட்டார்கள், சிலர் துப்பாகிகளின் மாடலையே மாற்றிவிட்டார்கள்.

12(7) என்னும் உரிமம் சட்டப்படி துப்பாக்கி வைத்துள்ள ஒருவரிடமிருந்து அவரது சந்ததியினர் அந்தத் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் உரிமம் ஆகும்.

ஆனால் அதற்கு பதிலாக தவறுதலாக 12(6) உரிமங்கள் வழங்கப்பட்டதே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தவறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது பொலிஸ் துறை துப்பாக்கி வைத்திருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை திருப்பிக் கொடுக்குமாறு கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது ஒரு புறமிருக்க துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை துப்பாக்கி குண்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

அந்த குற்றத்திற்கு மிக நீண்ட காலம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்