கனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்

Report Print Raju Raju in கனடா
160Shares
160Shares
lankasrimarket.com

கனடாவில் கடல் சிங்கம் (walrus) ஒன்று நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் உயிரிழந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்கா என்னும் 13 வயதான கடல் சிங்கம் Quebec நகர நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் வசித்து வந்தது.

சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சம்கா மூன்று தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தது.

இது குறித்து காட்சியகத்தின் மேலாளர் கூறுகையில், கடந்த 2016-ல் கூண்டுக்குள்ளேயே சம்கா குட்டியை ஈன்றது.

சம்காவுடன் பக்கத்து கூண்டில் இருந்த அர்னிலாக் என்ற கடல் சிங்கமும் அதே சமயத்தில் குட்டியை ஈன்றது அப்போது தலைப்பு செய்தியாக ஆனது.

ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ஜாலியாக விளையாடுவதை சம்கா வழக்கமாக கொண்டிருந்தது.

சம்காவின் மறைவு அவர்களை பெரிதும் மனம் வருந்த செய்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்